ரவிசாஸ்திரி ஒப்பந்த காலம் மேலும் 45 நாட்கள் நீட்டிப்பு
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் ஆகியோரின் பதவி காலம் முடிவடைவதாக இருந்தது. அதன் பிறகு புதிய பயிற்சியாளருக்கான நேர்காணல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ரவிசாஸ்திரி மற்றும் உதவி பயிற்சியாளர்களின் ஒப்பந்த காலத்தை இடைக்கால ஏற்பாடாக மேலும் 45 நாட்கள் நீட்டிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி முடிவு செய்துள்ளது.