ஸ்மிரிதி இராணி எம்.பி.யாக பதவியேற்கும் போது நீண்ட நேரம் மேஜையை தட்டி பாராட்டிய பாஜக எம்.பி.க்கள்
17-வது மக்களவையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு எம்.பி.க்களாக இடைக்கால சபாநாயகர் வீரேந்திரநாத் குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் இன்று எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டனர்.
அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வீழ்த்தி, எம்.பி.யாக தேர்வான ஸ்மிரிதி இராணியும் இன்று எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். ஸ்மிரிதி இராணி எம்.பி.யாக பதவியேற்கும் போது, பாஜக எம்.பி.க்கள் மேஜையை தட்டி நீண்ட நேரம் வரவேற்பு தெரிவித்தனர். பிரதமர் மோடி, ராஜ்நாத்சிங் உள்பட பாஜக எம்.பி.க்கள் நீண்ட நேரம் மேஜையை தட்டி பாராட்டினர்.
இந்தியில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட ஸ்மிரிதி இராணி, இடைக்கால சபாநாயகர் விரேந்திர குமார், சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது ராகுல் காந்தி அவையில் இல்லை. மத்திய ஜவுளித்துறை அமைச்சரான ஸ்மிரிதி இராணி, அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை சுமார் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.