ஜம்முவில் 5 மாவட்டங்களில் மீண்டும் செல்போன் சேவை துவங்கியது
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, அந்த மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். செல்போன், இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.
இந்த நிலையில், ஜம்முவில் உள்ள ஐந்து மாவட்டங்களில் மீண்டும் செல்போன் சேவை தொடங்கியுள்ளது. தோடா, கிஸ்துவார், ரம்பான்,ராஜோரி மற்றும் பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் செல்போன் சேவை தொடங்கியுள்ளது.