ஓபிஎஸ் அணியில் 11 எம்.பி.க்கள்: அதிமுகவை உடைத்து அமைச்சரவையில் இடம் கொடுக்க பாஜக அரசு முடிவு?
அதிமுகவை உடைத்து மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் 11 எம்.பி.க்கள் இணைந்துள்ளது இதை உறுதிப்படுத்துவதுபோல அமைந்துள்ளது.
அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக கடந்த 5-ம் தேதி சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். 7 அல்லது 9-ம் தேதி அவர் முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், கடந்த 7-ம் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், தன்னை மிரட்டி ராஜி னாமா செய்ய வைத்ததாகவும், ராஜினாமாவை திரும்பப் பெறப் போவதாகவும் அறிவித்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து கடந்த 9-ம் தேதி ஆளுநரை சந்தித்த ஓபிஎஸ், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார். அதே நாளில் ஆளுநரை சந்தித்த சசிகலா, பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்ப தால் தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்றார். இரு வரின் கோரிக்கையையும் கேட்டுக் கொண்ட ஆளுநர், இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
இதனால் கோபமடைந்த சசிகலா, ‘பொறுமைக்கும் எல்லை உண்டு. செய்ய வேண்டியதை செய் வோம். எதற்கும் அஞ்ச மாட்டோம்’ என எச்சரித்தார். ஆளுநர் கால தாமதம் செய்து வருவதால் சசிகலா ஆதரவாளர்களின் கோபம் ஆளுநர் மீது திரும்பியுள்ளது.
கூவத்தூரில் தங்க வைக்கப்பட் டுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்திவிட்டு போயஸ் தோட்டம் திரும்பிய சசிகலா, ‘அதிமுகவை பிளவுபடுத்தவே ஆளுநர் தாமதப் படுத்தி வருகிறார்’ என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் பி.ஆர்.சுந்தரம், கே.அசோக்குமார், வி. சத்தியபாமா, ஆர்.வனரோஜா, ஜெய்சிங் தியாக ராஜ் நட்டர்ஜி, ஆர்.பி.மருதராஜா, பி.செங்குட்டுவன், எஸ்.ராஜேந் திரன், பார்த்திபன் ஆகிய 9 மக்க ளவை உறுப்பினர்கள், ஆர்.லட்சு மணன், வி.மைத்ரேயன் ஆகிய 2 மாநிலங் களவை உறுப்பினர்கள் என 11 எம்.பி.க்கள் ஓபிஎஸ்-ஐ நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ள னர். சசிகலா தரப்பினர் எம்எல்ஏக் களை தற்காப்பதில் கவனம் செலுத்தி வரும் நிலையில் 11 எம்.பி.க்கள் ஓபிஎஸ் பக்கம் சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சசிகலாவிடம் நேற்று செய்தியாளர் கள் கேட்டபோது, ‘‘எம்.பி.க்கள் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவிப்ப தன் பின்னணியில் யார் இருக்கிறார் கள் என்பது எல்லோருக்கும் தெரி யும். அதிமுகவை உடைக்க வேண் டும் என்பதற்காக செய்யப்படும் சதி’’ என குற்றம்சாட்டினார்.
சசிகலா வெளிப்படையாக பாஜகவை குறிப்பிட்டு பேசவில்லை என்றாலும் ராமநாதபுரம் தொகுதி அதிமுக எம்.பி. அன்வர்ராஜா, ‘‘சசி கலாவை ஆட்சி அமைக்க அழைப் பதில் ஆளுநர் காலதாமதம் செய் வது, எம்.பி.க்கள் ஓபிஎஸ் பக்கம் செல்வது ஆகியவற்றின் பின்னணி யில் பாஜக இருக்கிறது’’ என பகிரங் கமாக குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசையும், ஆளுநரையும் விமர்சிப்பதை இதுவரை தவிர்த்து வந்த அதிமுகவினர், இப்போது பாஜகவை வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பாக அதிமுக முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் எளிதாக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா மறைந்த உடனேயே அதிமுகவை உடைக்கும் வேலையில் பாஜக இறங்கிவிட்டது. அதற்காகவே ஓபிஎஸ்-ஐ மட்டும் ஆதரித்து வந்தனர். இப்போது எம்.பி.க் களுக்கு பதவி ஆசை காட்டி ஓபிஎஸ் பக்கம் அனுப்பிக் கொண் டிருக்கின்றனர். மூன்றில் இரு பங்கு எம்.பி.க்களை இழுத்து தனி அணியை உருவாக்கினால் மத்திய அமைச்சரவையில் பங்கு தருவதாக அதிமுக எம்.பி.க்களுக்கு பாஜக வலைவிரித்து வருகிறது’’ என்றார்.
ஆரம்பம் முதலே சசிகலாவை தீவிரமாக ஆதரித்து வந்த மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, கடந்த 3 நாட்களாக எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறார். செங் கோட்டையனுக்கு அவைத் தலைவர் பதவியும், திண்டுக்கல் சீனிவாசனுக்கு பொருளாளர் பதவி யும் அளிக்கப்பட்டதில் அதிருப்தி யாக உள்ள தம்பிதுரையை பாஜக தன் பக்கம் இழுத்துவிட்டதாகவும் அதிமுக மற்றும் பாஜக வட்டாரங் களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. 50 எம்.பி.க்கள் இருப்ப தால் மத்திய அரசுக்கு சசிகலா தரப்பினர் நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது என்பதால் அதிமுகவை உடைக்கும் முயற்சி யில் பாஜக ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நன்றி : தி இந்து தமிழ்