‘டைம்ஸ்’ நிறுவனத்தின் சர்வதேச தரவரிசை பட்டியல் வெளியீடு: இந்திய கல்வி நிறுவனம் ஒன்றுகூட முதல் 300 இடங்களுக்குள் வரவில்லை- கல்வியாளர்கள் அதிர்ச்சி
‘டைம்ஸ்’ நிறுவனத்தின் உலகளா விய தரவரிசை பட்டியலில் முதல் 300 இடங்களில் இந்திய பல்கலைக்கழகம் ஒன்று கூட இடம்பெறாதது கல்வியாளர் களை அதிர்ச்சியடைய செய் துள்ளது.
கல்வித்தரம், ஆராய்ச்சிக்கான முக்கியத்துவம், அறிவுசார் சொத் துரிமை உட்பட பல்வேறு அம்சங் கள் அடிப்படையில் உலகளவில் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலை ‘டைம்ஸ்’ நிறுவனம் தரவரிசைப்படுத்தி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், 2020-ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டது.
இதில் இங்கிலாந்தின் ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழகம் முத லிடத்தையும், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக் கழகம் 2-ம் இடத்தையும், இங்கி லாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகம் 3-ம் இடத்தையும் பிடித் துள்ளன.
முதல் 7 இடங்களில் அமெரிக்கா
முதல் 10 இடங்களில் 7 அமெ ரிக்க கல்வி நிறுவனங்களும், 3 இங்கிலாந்து பல்கலைக் கழ கங்களும் இடம்பெற்றுள்ளன. அதேநேரம் இந்தியாவின் முன் னணி உயர்கல்வி நிறுவனங்கள் ஒன்றுகூட அந்த பட்டியலில் இடம் பெறவில்லை.
பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி), ரோபர் ஐஐடி, இந்தூர் ஐஐடி ஆகியவை தரவரிசையில் 300 முதல் 400 வரையான இடங் களையும், மும்பை ஐஐடி, டெல்லி ஐஐடி, கரக்பூர் ஐஐடி ஆகி யவை பட்டியலில் 400-500 இடையேயான இடங்களையும் பெற்றுள்ளன.
மேலும், 501-600 இடைப்பட்ட தரவரிசையில்தான் மும்பை கெமிக் கல் தொழில்நுட்ப நிறுவனம், காந்திநகர் ஐஐடி, ரூர்கி ஐஐடி ஆகியவை உள்ளன. இதுதவிர 601-800 வரையான பட்டியலில் சென்னை ஐஐடி, கோவை அமிர்தா விஷ்வ வித்யபீடம், கான்பூர் ஐஐடி, கவுஹாத்தி ஐஐடி, புவனேஸ்வர் ஐஐடி, ஐதராபாத் ஐஐடி, புனே இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனம், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் ஆகியவை இருக்கின்றன.
கல்வியாளர்கள் கோரிக்கை
800 முதல் 1000 வரை தரவரிசை பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கோவை வேளாண் பல்கலைக் கழகம், திருச்சி என்ஐடி, வேலூர் விஐடி, தஞ்சை சாஸ்த்ரா பல் கலைக்கழகம், கோவை பிஎஸ்ஜி, சென்னை எஸ்ஆர்எம் உட்பட 53 கல்வி நிறுவனங்கள் முதல் முறையாக இடம்பெற்றுள்ளன.
பெங்களூரு இந்திய அறிவி யல் கழகம் தரவரிசையில் இந்த ஆண்டு பின்தங்கியுள்ளது. ரோபர் ஐஐடி பட்டியலில் முன்னேறியுள் ளது. ‘‘உலகளாவிய தரவரி சைப் பட்டியலில் முதல் 300 இடங்களில் இந்திய பல்கலைக் கழகங்கள் எதுவும் இடம்பெறா தது வருத்தப்பட வேண்டிய ஒன்று. கூடுதல் நிதி ஒதுக்கி கல்வி நிறுவனங்கள் வளர்ச்சியை மத்திய அரசு ஊக்குவிக்க வேண்டும்’’ என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.