டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்
70 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். டெல்லி சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
எனவே, அதற்குள்ளாக தேர்தல் நடத்தி புதிய அரசை தேர்வு செய்ய வேண்டியது அவசியம். இந்த நிலையில், டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதியை இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.
நாட்டின் தலைநகர் என்பதாலும், மராட்டியம், ஜார்க்கண்ட் என தொடர்ந்து பாஜக ஆட்சியை பறிகொடுத்து வரும் நிலையில், டெல்லி சட்டமன்ற தேர்தல் நாடு முழுவதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மியும் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், பாஜகவும் வியூகங்கள் வகுத்து வருகின்றன.