Breaking News
ஈரானில் உக்ரைன் விமான விபத்து : 170 பயணிகளும் உயிரிழப்பு

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் நாட்டு ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொலை செய்யப்பட்டார். அவர் ஈரானின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக அறியப்பட்டவர். காசிம் சுலைமானி கொல்லப்பட்ட பிறகு ஈரான் அமெரிக்கா இடையே போர் உருவாகும் சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், ஈராக்கின் அல் அசாத் பகுதியில் இருந்த அமெரிக்க படைதளத்தின் மீது ஈரான் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடத்தப்பட்டதை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது. ஈரானின் தாக்குதலில் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தற்போது உக்ரைன் பயணிகள் விமானத்தை ஈரான் படைகள் தவறுதலாக சுட்டு வீழ்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே உக்ரைன் நாட்டு விமானம் ஈரான் தலைநகர் தெஹ்ரான் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது.

இந்நிலையில், அந்த விமானம் ஈரான் நாட்டு படைகளே தவறுதலாக சுட்டுவீழ்த்தியிருக்கலாம் என அந்நாட்டு ஊடகம் ஒன்று கூறி உள்ளது. இது தொடர்பாக உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால் தொழில் நுட்பகோளாறு தான் விபத்து ஏற்பட்டு உள்ளது என நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்ததாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்து உள்ளது. விழுந்தவுடன் விமானத்தில் தீ மளமளவென பயங்கரமாக எரிந்ததால் எங்களால் எந்த மீட்பையும் செய்ய முடியவில்லை. எங்களிடம் 22 ஆம்புலன்ஸ், நான்கு பஸ் ஆம்புலன்ஸ் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் உள்ளது என்று ஈரானின் அவசர சேவைகளின் தலைவர் பிர்ஹோசீன் கவுலிவண்ட் அரசு தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

ஈரானின் சிவில் ஏவியேஷன் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ரேசா ஜாபர்சாதே, அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் விமானத்தில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 170 என்று கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.