Breaking News
ஒருவகையில் கைதி படத்துக்கு நானும் இயக்குனர்தான் – மேடையில் கமல் கலகல !

என்படங்கள் கைதி படத்துக்கு இன்ஸ்பிரேஷன் என்றால் நானும் அந்த படத்துக்கு இயக்குனர்தான் என நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் வெளியாகி மெகா ஹிட்டாகி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த படம் என்றால் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கைதி திரைப்படம்தான். கமலின் மிகப்பெரிய ரசிகரான லோகேஷ் சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது ‘நான் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றவில்லை. ஆனால் கமல் நடித்த அனைத்து படங்களையும் பார்த்துள்ளேன். அவருடைய படங்கள்தான் எனக்கு கைதி எடுக்கும் இன்ஸ்பிரேஷன் ஆக அமைந்தது’ எனக் கூறினார்.

லோகெஷுக்கு பின்னர் பேசிய கமல், ‘என்னுடைய படங்கள் அவருக்கு இன்ஸ்பிரேஷன் என்பதில் மகிழ்ச்சி. அந்த வகையில் கைதி படத்துக்கு நானும் ஒரு இயக்குனர்தான். ’ எனக் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.