தீர்ப்புக்கும் அமைதியாக எதிர்வினையாற்ற மெரினா உத்வேகம் தேவை: கமல்ஹாசன்
தீர்ப்புக்கும் அமைதியாக எதிர்வினையாற்ற மெரினா உத்வேகம் தேவை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கமல்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலில் இன்று மிக முக்கியமான நாளாகும். சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று (பிப்ரவரி 14) காலை 10:30 மணிக்கு வெளியாகும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசியல் நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் கமல்ஹாசன், நேற்று “நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும். தீர்ப்பு வேறு தீர்வு வேறு. நாளை மற்றொரு நாளே. பொறுத்தாரே பூமியாள்வர்” என்று தெரிவித்திருந்தார்.
மேலும், இன்று காலை “தீர்ப்புக்கும் அமைதியாக எதிர்வினையாற்ற மெரினா உத்வேகம் தேவை. மக்கள் சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட மதிப்பளித்து எப்போதும் உறுதுணைபுரிவர்.
நீதிமன்றங்கள் தங்கள் கடமையைச் செய்யட்டும். மக்களும் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
நன்றி : தி இந்து தமிழ்