டெல்லியில் ரூ.1,000 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் அழிப்பு
நாட்டில் வருங்கால தூண்கள் என கூறப்படும் இளைய சமூகத்தினரை இலக்காக கொண்டு போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கடத்தப்பட்டு இந்தியாவிற்குள் கொண்டு வரப்படும் இந்த போதை பொருட்கள் பின்னர் இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் கடத்தப்படுகிறது.
இந்நிலையில், பல்வேறு காலகட்டங்களில் கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் புதுடெல்லியில் இன்று அழிக்கப்பட்டன. புதுடெல்லியின் நிலோத்தி நகரில் குறிப்பிட்ட இடத்தில் வைத்து, குறிப்பிட்ட நேரத்தில் சுங்க துறை அதிகாரிகள் 207.109 கிலோ கிராம் எடை கொண்ட ஹெராயின் என்ற போதை பொருளை அழித்தனர்.
இதன் தோராய சந்தை மதிப்பு ரூ.1,000 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.