சென்னையில் மீண்டும் கொத்து கொத்தாக பரவும் கொரோனா வைரஸ் பாதிப்பு
சென்னை
சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள தங்க நகைப்பட்டறையில் பணியாற்றும் மேற்கு வங்க தொழிலாளர்கள் 54 பேரில், 22 பேருக்கு, மாநகராட்சி சுகாதாரத்துறை நடத்திய பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 22 பேரும் தண்டையார்பேட்டையில் உள்ள காலரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதே போன்று சென்னை அண்ணா நகர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 11 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.