10.5 சதவீத பொருளாதார வளர்ச்சி: ரிசர்வ் வங்கி கணிப்பு
மும்பை: 2021-22ம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10.5 சதவீதம் ஆக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்து உள்ளது.
இது தொடர்பாக நிருபர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை 4 சதவீதமாக தொடரும். ரிவர்ஸ் ரெபோ வட்டி வகிதம் 3.35 சதவீதமாகவே இருக்கும். 2021-22ம் நிதியாண்டிற்கான ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச் 10.5 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளோம்.
கொரோனாவின் 2வது அலை காரணமாக சில மாநில அரசுகள் விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக, உள்நாட்டு வளர்ச்சியில் நிச்சயமற்ற சூழ்நிலை நிலவுகிறது. சந்தைகளில் போதுமான பணப்புழக்கம் நிலவும் வகையில் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும். இந்திய நிதி நிறுவனங்களுக்கு, 50 ஆயிரம் கோடி கடன் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.