மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது: அரவிந்த்சாமி காட்டம்
கட்சியிலோ, ஆட்சியிலோ எம்.எல்.ஏக்களின் சொந்த விருப்பம் என்ன என்பது சந்தேகத்துக்கிடமாகவே இருக்கும் என்று அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலில் இன்று மிக முக்கியமான நாளாகும். சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என்று அறிவித்து, 4 ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.
தீர்ப்புக்குப் பிறகு அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு, ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார்.
அரசியல் நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் அரவிந்த்சாமி “எம்.எல்.ஏக்களை மக்கள் எளிதாக தொடர்புகொள்ள முடியாத வரை / எல்லாம் வெளிப்படையாக இல்லாத வரை, அவர்களது தலைவர் தேர்விலோ, கட்சியிலோ, ஆட்சியிலோ அவர்களது சொந்த விருப்பம் என்ன என்பது சந்தேகத்துக்கிடமாகவே இருக்கும்.
விடுமுறையைக் கழிக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பு என்ற பெயரில் விடுதியின் வெளியே ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டு, மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நன்றி : தி இந்து தமிழ்