இந்தியாவுக்கு ரூ.29 லட்சம் நிதி உதவி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரியம்
மெல்போர்ன்,
இந்தியாவின் கொரோனா நிவாரணப் பணிகளுக்காகக் கிட்டத்தட்ட ரூ. 29 லட்சத்தை நிதி உதவியாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அளித்துள்ளது. இந்தத் தொகை யுனிசெஃப் ஆஸ்திரேலியா அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கொரோனா நிவாரணப் பணிகளுக்கு அத்தொகை செலவிடப்படும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
“இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கிரிக்கெட் உள்பட பல்வேறு விவகாரங்களில் பரஸ்பர பிணைப்பை கொண்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலையால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது எங்களுக்கு கடும் வேதனையை அளித்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.