டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமான நிலையில் நீடிப்பு
புதுடெல்லி,
தீபாவளிக்கு பின்பு வருடா வருடம் டெல்லியில் அக்டோபர் மாதத்திற்கு பின் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி வரை காற்று மாசு கொஞ்சம் கொஞ்சமாக டெல்லியில் அதிகரித்துக்கொண்டே செல்லும்.
இந்த நிலையில்தான் கடந்த முறையை போல இந்த முறையும் டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த தீபாவளி அன்று பட்டாசு வெடிவெடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் தடையை மீறி டெல்லியில் பல இடங்களில் வெடிகள் வெடிக்கப்பட்டது. இதனால் டெல்லியில் பல பகுதிகளில் காற்று மாசு அளவு 600 புள்ளிகளை தாண்டியது.
அபாயகரமான அளவை டெல்லி காற்று மாசு எட்டியது. இந்த நிலையில் இன்றும் டெல்லியில் காற்று மாசு அளவு மோசமான நிலையில் நீடிக்கின்றது. காற்றின் தரக் குறியீடு 382 என்ற நிலையில் உள்ளது. காலையில் நடைபயிற்சி செல்பவர்கள் காற்று மாசுபாட்டால் சற்று சிரமப்பட்டனர்.