நீட் மதிப்பெண் குறைந்தாலும் மருத்துவ கனவை நனவாக்கும் ஸ்மைல் எஜுகேஷன் கன்சல்டன்ஸி
இந்த வருடம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நீட் – யுஜி தேர்விற்கான முடிவுகளை என்டிஏ நவம்பர் 1 ஆம் தேதி அறிவித்துள்ளது. நீட்- யுஜி 2021 தேர்வை கடந்த 5 வருடத்தை விட அதிகபட்சமாக 16.14 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இத்தேர்வின் கட் ஆப் மதிப்பெண்கள் யுஆர்/இடபிள்யுஎஸ் – 720-138, ஒபிசி/ எஸ்ஸி/ எஸ்டி – 137-108 என்று என்டிஏ அறிவித்துள்ளது. இதில் 3 மாணவர்கள் மட்டுமே 720/720 என்ற முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இந்த தேர்வின் முடிவுகளை கீழ்காணும் இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம்:https://www.mbbsadmission.co/neet-ug-cut-off/
ஒவ்வொரு வருடமும் பல மாணவர்கள் மருத்துவ கனவுடன் உயர் கல்வி பெற வருகின்றனர். இதில் பல மாணவர்கள் உள்நாட்டில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காவிட்டாலும் வேறு நாடுகளுக்கு சென்று தங்கள் கனவை நனவாக்கிக்கொள்கின்றனர். அந்த வகையில் பல மாணவர்கள் வங்கதேசத்தில் மருத்துவம் படிக்க விரும்புகின்றனர். இதற்கு காரணங்களாக நடுத்தர மக்களுக்கான நியாயமான கட்டணம், இங்கு வாழ்வதற்கான செலவுகள் குறைவாக இருப்பது, IELTS/TOEFL/PTE போன்ற நுழைவு தேர்வுகள் தேவையில்லை என்பதும், வங்கதேச அரசு சார்க் ஸ்காலர்ஷிப் (SAARC) திட்டத்தின் மூலம் 22 இடங்களை இந்திய மாணவர்களுக்கு ஒதுக்குகிறது என்பதும், இங்குள்ள மற்ற தனியார் கல்லூரிகள் 40-45 சதவிகித இடத்தை வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்குகிறது என்பதும் மற்றும் வங்கதேசத்தின் MBBS மருத்துவக்கல்வியின் தரம் சிறப்பாக இருப்பதென்பதும் என்றால் மிகையல்ல.
ஸ்மைல் எஜுகேஷன் கன்சல்டன்ஸி கடந்த பல வருடங்களாக பல நூறு மாணவர்களின் மருத்துவ கனவுகளை நிறைவேற்றியுள்ளனர். மருத்துவப் படிப்பிற்காக மாணவர்கள் சேருவதற்கு உண்டான விதிமுறைகள் மாணவர்களுக்கான தகுதிகள் போன்றவற்றை நேரிலோ அல்லது இணையதளத்தின் மூலமாகவோ ஸ்மைல் எஜுகேஷனல் கன்சல்டன்ஸி அளிக்கின்றனர்.
வங்கதேசத்தில் படிப்பதில் சில நடைமுறை பிரச்சனைகளும் உள்ளன. கடுமையான மாணவர் தேர்வு, ஏசி ஹாஸ்டல் வேண்டுமெனில் கூடுதல் கட்டணம் செலுத்தி தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என்பது, முழுமையான சைவ உணவு கிடைப்பதில் சிரமம், முதல் 2.5 வருடங்கள் முடிந்தவுடன் புற சிகிச்சை பிரிவில் நோயாளிகளிடம் வங்காளத்தில் பேசவேண்டும் என்பது மற்றும் முதல் வருட கட்டணம் மட்டும் மிக அதிகமாக இருப்பது என்பது போன்றவையாகும். இவற்றை எல்லாம் கடந்தும் வருடாந்திர மாணவர் சேர்கை வங்கதேச மருத்துவ படிப்பிற்கு அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. FMGE அட்டவணைப்படி 2015-2018 வரை 27.11% இருந்த எண்ணிக்கை 2019 இல் 37.98% என்றும் 2020 இல் 36.7% என்றும் இருந்து வருகிறது.
தி பங்களாதேஷ் மெடிக்கல் & டென்டல் கவுன்சில் என்பது வங்கதேசத்தில் மருத்துவ படிப்பை முறைப்படுத்தி தரத்தை கண்காணிக்கும் சட்டபூர்வ அமைப்பாகும். எல்லா கல்லூரிகளும் அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. தற்போது 112 அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரிகள் இயங்குகின்றனர். இங்கு பட்டம் பெரும் மாணவர்கள் பேச்சிலர் ஆப் மெடிசன் அண்ட் பேச்சிலர் ஆப சர்ஜரி (MBBS) பட்டத்தை அரசு மருத்துவ பல்கலைகழகத்தில் இருந்து பெறுகின்றனர்.
வங்கதேசத்தின் அரசு மருத்துவ பல்கலைகழகங்கள் பட்டியல்
பங்களாதேஷ் யூனிவர்சிட்டி ஆப் ப்ரோபஷனல்ஸ்
சிலட் மெடிக்கல் யூனிவர்சிட்டி
சிட்டகாங் மெடிக்கல் யூனிவர்சிட்டி
யூனிவர்சிட்டி ஆப் டாக்கா
ராஜ்ஷாஹி மெடிக்கல் யூனிவர்சிட்டி
மாணவர்கள் வங்கதேசத்தில் மருத்துவம் படிக்க நீட் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.
ஸ்மைல் எஜுகேஷன் கன்சல்டன்ஸி தற்போது வங்கதேசத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு தங்களுக்கான கல்லூரியை தேர்ந்தெடுக்க உதவுவதுடன், மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகளையும் மாணவர்களுக்கு தேவைப்படும் தகுதிகளையும் பற்றிய விரிவான விளக்கங்களையும் வழங்கி வருகின்றனர். மாணவர்களின் நோக்கத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கான சிறந்த வழிமுறைகளை அளித்து அவர்களின் கனவை நனவாக்க பல வங்கதேசத்தின் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து இயங்குகிறது ஸ்மைல் எஜுகேஷன் கன்சல்டன்ஸி.