Breaking News
மழை பாதிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4-வது நாளாக ஆய்வு

சென்னை,

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தலைநகர் சென்னையில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவு பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ள நீரை வெளியேற்றும் பணியை அரசு முடுக்கி விட்டாலும், பல்வேறு இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாததால் பலர் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

இந்தநிலையில், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில், கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த 2 நாட்களாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்களையும் வழங்கினார்.

இந்தநிலையில், சென்னையில் மழை, வெள்ள பாதிப்புகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4-வது நாளாக ஆய்வு செய்து வருகிறார்.

தி.நகர் விஜயராகவா சாலையில் மழை, வெள்ள பாதிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு வருகிறார். மாம்பல் கால்வாய் பகுதியில் கழிவுகளை அகற்றும் பணிகளை முதல்-அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.