காலிஃப்ளவர் சில்லி
தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் பூ – ஒரு பவுலில் பீஸாக பொடித்தது
இஞ்சி – 1 துண்டு (சீவியது)
பூண்டு – 5 பற்கள் (தோல் உரித்து)
பச்சை முட்டை – 1
காா்ன்ஃப்ளாா் மாவு – 1டீஸ்பூன்
கரி மசால் தூள் – 1 or 2 ஸ்பூன் (காரத்திற்கேற்ப)
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் காலிஃப்ளவர் பூவை நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொண்டு, பிறகு இஞ்சி பூண்டு விழுது, காா்ன்ஃப்ளாா் மாவு, கரி மசால் தூள், உப்பு தேவையான அளவு சேர்த்து அதனுடன் ஒரு பச்சை முட்டையை உடைத்து ஊற்றி கழுவிய காலிஃப்ளவர் பூவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடேறிய பிறகு நாம் கலந்து வைத்த காலிஃப்ளவர் கலவையை ஒவ்வொன்றாக தூவி அது பொன்னிறமாக நன்கு வெந்த பிறகு எடுத்தால் சுவையான காலிஃப்ளவர் சில்லி தயாா்.