Breaking News
கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கியிலும் மாற்றிக் கொள்ளலாம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

பெங்களூரு,

கிழிந்த மற்றும் மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற அந்தந்த மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு செல்லவேண்டிய நிலை இருந்தது. இதனால் மாநிலங்களில் தலைநகரங்களில் உள்ள மக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற வசதி இருந்தது. ஆனால், கிராம புற மக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாத நிலையில் இருந்தனர்.

இதனால் நாடு முழுவதும் மாதந்தோறும் பல கோடி ரூபாய் வீணாகி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், அவற்றின் கிளை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் கிழிந்த, மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் வங்கிகள், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலை பின்பற்ற முடியாமல் போனது.

இதனால் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் இனிமேல் பொதுமக்கள் கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கிகளிலும் மாற்றி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் அறிக்கை அனுப்பி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களுக்கு கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுக்க உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும், போதுமான அளவு சில்லரை நாணயங்களை வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.