Breaking News
கொரோனா காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவையில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நவம்பர் 15ம் தேதி முதல் நீக்கம்!!

சென்னை : கொரோனா காரணமாக சென்னை புறநகர் ரயில்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக புறநகர் ரயில் சேவையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் கொரோனா காரணமாக சென்னை புறநகர் ரயில்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நவம்பர் 15ம் தேதி முதல் நீக்கப்படுவதாக தெற்கு ரயில்வே சென்னை மண்டலம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை புறநகர் ரயில்களில் நாளை மறுநாள் முதல் முன்பதிவில்லா பயணசீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பு பயணிகள் உள்பட பொதுமக்கள் நேர தடையின்றி புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.முன்பதிவில்லாத ஒற்றை, திரும்பும் பயண டிக்கெட்டுகள், சீசன் டிக்கெட்டுகள் ஆகியவற்றை அனைத்து பயணிகளும் பெற்றுக் கொள்ளலாம்.UTS செயலியிலும் முன்பதிவு இல்லாத டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இருப்பினும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற விதிமுறைகளை பயணிகள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.