குமரியில் 1,750 ஏக்கர் விவசாய பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின- விவசாயிகள் கவலை
குமரியில் கடந்த 11-ந் தேதி முதல் நேற்று வரை அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, திருவட்டார், கிள்ளியூர் ஆகிய 6 தாலுகா பகுதிகளிலும் 147 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
குமரியில் 1,750 ஏக்கர் விவசாய பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின- விவசாயிகள் கவலை
பூதப்பாண்டி அருகே மண்ணடி தென்பாறை கிராமத்தில் புகுந்த வெள்ளத்தில் நெற்பயிர்களும் மூழ்கின
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கொட்டித்தீர்த்த மழை மாவட்டத்தையே புரட்டி போட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் ஏராளமானோர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்னர். குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை வெள்ளம் இன்னும் முழுமையாக வடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து வருகிறது.
செங்கல்சூளைத் தொழில், உப்பளத் தொழில், மீன்பிடி தொழில், விவசாயத் தொழில், கட்டிட கட்டுமானத் தொழில், ரப்பர் பால் வெட்டும் தொழில் உள்பட பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.