ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டியின் தலைவரானார் சவுரவ் கங்குலி
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் சவுரவ் கங்குலி. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார். அதன்பின் பி.சி.சி.ஐ. தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது அந்த பதவியில் இருந்து வருகிறார்.
சவுரவ் கங்குலிக்கு ஐ.சி.சி. தலைவர் ஆகும் வாய்ப்பு இருந்தது. ஆனால், சில விசயங்களால் தலைவர் பதவியை வகிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அனில் கும்ப்ளே கடந்த 2012-ல் இருந்து மூன்று முறை மூன்று வருட பதவிக்காலம் அடிப்படையில் அப்பதவியை வகித்து வந்தார். அவரது பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி, தற்போது அவருக்குப் பதிலாக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
சவுரவ் கங்குலியை கிரிக்கெட் கமிட்டியின் சேர்மன் பதவிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என ஐ.சி.சி. தலைவர் கிரேக் பார்கிளே தெரிவித்துள்ளார்.