பெண்கள் பயம் கொள்ளாமல் ஆற்றல் பெற்று சிறந்து விளங்க வேண்டும் – தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் ஆண்டு விழா

பெண்கள் பயம் கொள்ளாமல் ஆற்றல் பெற்று சிறந்து விளங்க வேண்டும் – தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் ஆண்டு விழா

தூத்துக்குடி, ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் 24.04.2024 இன்று கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்வில், கல்லூரியின் செயலர் சுப்புலட்சுமி வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) முனைவர் சுப்புலட்சுமி 2023-2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்வுகளை அறிக்கையாக வாசித்தார்.

தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரியின் முதல்வர் முனைவர் அருட்சகோதரி எஸ். ஜெஸ்ஸி பெர்னாண்டோ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போது, மாணவியர் தாம் பயின்ற கல்லூரியைக் குறித்து பெருமை கொள்ள வேண்டும். இக்கல்லூரி உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தந்துள்ளது பெண்கள் பயம் கொள்ளாமல் ஆற்றல் பெற்று சிறந்து விளங்க வேண்டும். சமுதாயம் முன்னேற உழைக்க வேண்டும். பிறர் மகிழ்வு கொள்ளும் விதமாக நாம் நடந்து கொள்ள வேண்டும். இன்று உலகம் பலவற்றைக் கற்றுத் தருகிறது. அலைபேசிக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும். முதலில் இறைவனைத் தேட வேண்டும். இறைவனைத் தேடினால் எல்லாம் கிடைக்கும் என்று அருமையானதொரு கருத்துரை ஆற்றினார்.

பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற மாணவிகள், துறை வாரியாகப் பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவிகள், தமிழ்நாடு அரசின் முனைவர் பட்ட ஆய்வுக்கான உதவித்தொகை பெற்ற மாணவிகள் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும்,  ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு மாணவி சுப்ரஜா செல்லம், கணிதம் மூன்றாம் ஆண்டு மாணவி வைஷ்ணவி ஆகிய இருவருக்கும் சிறந்த மாணவியருக்கான பரிசையும்,  , தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவி ஆவுடைலட்சுமிக்கும் குறும்படத்திற்கான பரிசையும் பெற்றார்

மாணவியரின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லூரிப் பேரவைத்தலைவி வணிகவியல் மூன்றாமாண்டு மாணவி ஸ்ரீவித்யா மான்யா நன்றியுரை ஆற்றினார்.

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி பேரவைக்குழுப் பேராசிரிரியர்கள் அனைவரும் இணைந்து செய்திருந்தனர்.

செய்தியாளர் ரவி

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )