கூவத்தூரில் தங்கவைக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் ஆதரவாளர்கள் இடையே மோதல்
அதிமுக துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டதற்கும், சட்ட மன்றக் குழுத் தலைவராக அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கும் அக்கட்சி எம்எல்ஏக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, கூவத்தூர் தனியார் விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்எல்ஏக்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.
அதிமுக எம்எல்ஏக்களின் ஆத ரவை பெறுவதற்காக, சசிகலா தரப்பின் சார்பில் அக்கட்சி எம்எல்ஏக்கள் கூவத்தூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் 7-வது நாளாக தங்கவைக்கப்பட்டுள்ள னர். இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதற்கு முன்னதாக, கூவத்தூர் சொகுசு விடுதியில் அதிமுக சட்டமன்ற குழுத்தலைவராக எடப் பாடி பழனிசாமி தேர்வு செய்யப் பட்டு, ஆட்சியமைக்க ஆளுநரிடம் நேற்று உரிமை கோரப்பட்டது. மேலும், அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் நியமிக்கப்பட்டார்.
இதனால், விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் மத்தியில் அதி ருப்தி ஏற்பட்டுள்ளதாகவும், இதனை செங்கோட்டையனிடம் அவர்கள் நேரடியாக வெளிப்படுத் தியதாகவும் அதிமுக வட்டாரங் களில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், சசிகலாவுடன் நேற்று முன்தினம் போயஸ்கார்டன் சென்ற அமைச்சர்கள் மற்றும் செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் விடுதிக்கு திரும்பினர். விடுதியில் இருவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வெளியேற முயற்சியா?
இதில், கட்சியில் பல ஆண்டு களாக ஜெயலலிதாவின் நம் பிக்கை பெற்று கட்சிப் பணியாற்றிய செங்கோட்டையனுக்கு தலை மைப் பதவி கிடைக்கவில்லை என அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், விடுதியில் அதிகாலை வரை எம்எல்ஏக்கள் ஒருவித பதற்றத்துடன் இருந்ததாகவும், சில பெண் எம்எல்ஏக்கள், விடுதி யில் இருந்து வெளியேற முயற்சித் ததாகவும் கூறப்படுகிறது. இத னால், கூவத்தூர் விடுதியில் அதிமுகவின் 47 எம்எல்ஏக்கள் மட்டுமே தங்கியுள்ளதாக கூறப் படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் இணைந்து நேற்று செய்தியாளர் களை சந்திக்கவில்லை. மாறாக குறிப்பிட்ட எம்எல்ஏக்கள் மட் டும் அவ்வப்போது, செய்தியாளர் களை சந்தித்து தாங்கள் மகிழ்ச்சி யாக தங்கியுள்ளதாக தெரி வித்தனர்.
இதற்கிடையே, அமைச்சர்கள் சரோஜா மற்றும் வளர்மதி ஆகி யோர் சில பெண் எம்எல்ஏக்களு டன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இதில், ‘விருப்பத்தின் பேரிலேயே நாங்கள் தங்கியுள் ளோம். ஆளுநர் ஆட்சியமைக்க எங்களை அழைப்பார் என நம் பிக்கையுடன் காத்திருக்கிறோம். நாங்கள் விடுதியில் இருந்து வெளியேற வேண்டும் என முதல் வர் பன்னீர்செல்வம் காவல்துறை மூலம் அழுத்தம் அளித்து வருகிறார்’ என்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி.தின கரன் மீண்டும் கட்சியில் இணைக் கப்பட்டதை நீங்கள் ஏற்றுக் கொள் கிறீர்களா என்ற செய்தியாளர் களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் வளர்மதி, ‘கட்சி தலைமையிடம் மன்னிப்புக் கோரி தினகரன் கடிதம் அளித்ததால், அவரை மீண்டும் கட்சியில் இணைத் துள்ளதாக அதிமுகவின் தலைமை தெரிவித்துள்ளது. கட்சித் தலைமை யின் முடிவுக்கு நாங்கள் கட்டுப் படுவோம்’ என்றார்.
நன்றி : தி இந்து தமிழ்