Breaking News
அச்சமுமின்றி, பாரபட்சமின்றி நேர்மையாக செயல்படுவேன் – புதிய பொறுப்பு தலைமை நீதிபதி பேச்சு
சென்னை,
சென்னை ஐகோர்ட்டின்  50-வது தலைமை நீதிபதியாக கடந்த ஜனவரி மாதம், 4-ம் தேதி சஞ்ஜிப் பானர்ஜி நியமிக்கப்பட்டார். வரும் 2023-ம் ஆண்டு, நவம்பர் மாதம் வரை சஞ்ஜிப் பானர்ஜியின் பணிக்காலம் இருக்கும் நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் குழுக் கூட்டத்தில், நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா ஐகோர்ட்டிற்கு மாற்றப் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில், நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா ஐகோர்ட்டிற்க்கு மாற்றபட்ட நிலையில், நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியை, சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றி  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதனையடுத்து, இன்று சென்னை ஐகோர்ட்டின்  புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி சென்னை கவர்னர் மாளிகையில் பொறுப்பேற்றார். இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி-க்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில் பேசிய நீதிபதி பண்டாரி,
 பணியில் பயமோ, பரபட்சமோ இருக்காது. எவ்வித அச்சமுமின்றி, பாரபட்சமின்றி நேர்மையாக செயல்பட உறுதி அளிக்கிறேன்.
இங்கு நிறைய பேச விரும்பவில்லை. ஆனால் செயலில் காட்டுவேன். தற்போது, வணக்கம்,நன்றி போன்ற வார்த்தையாக கற்றுள்ளேன்.
நேற்று தான் தமிழ் கற்க தொடங்கினேன். அடுத்து வரும் நாட்களில் தமிழில் பேச முயற்சிப்பேன்.
தினமும் சில வார்த்தைகளை கற்றுக் கொடுங்கள்.  தமிழகத்தில் பிறக்க வேண்டுமென கனவுகண்டேன். இங்கு பணியாற்றுவதன் மூலம் அந்த கனவு நனவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.