எம்எல்ஏக்களை கடத்தி வைத்துள்ளதாக புகார்: சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு – எம்எல்ஏக்களிடம் எஸ்பி விசாரணை; ஐஜி ஆய்வு
அதிமுக எம்எல்ஏக்களை கடத்தி சென்று மிரட்டி கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கவைத்துள்ளதாக மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் போலீஸில் புகார் அளித்தார். இதன்பேரில் ஐஜி செந்தாமரைக்கண்ணன், காஞ்சி புரம் மாவட்ட எஸ்பி முத்தரசி ஆகியோர் நேற்று விசாரணை நடத்தினர்.
அதிமுகவில் உட்கட்சி பூசல் நடந்து வரும் நிலையில், அக்கட்சி யின் எம்எல்ஏக்கள் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூர் பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் 7-வது நாளாக தங்கவைக்கப் பட்டுள்ளனர்.
இந்த விடுதியில் அடைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன், மாறுவேடத்தில் தப்பி வந்ததாகவும், எம்எல்ஏக்கள் அனைவரும் சசிகலா தரப்பி னரால் கடத்தி செல்லப்பட்டு விடுதி யில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தாகவும், முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக தமிழக காவல் துறையிலும் அவர் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப் பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் காவல் நிலை யத்தில் ஆள்கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் 342, 343, 365, 353, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இந்தப் புகார் தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி முத்தரசி தலைமையிலான போலீஸார், நேற்று பிற்பகல் 12 மணியளவில் விடுதிக்கு நேரில் சென்று எம்எல்ஏக்களிடம் தனித் தனியாக விசாரணை நடத்தி னர். சுமார் 3 மணி நேரம் நீடித்த விசாரணையில் சில எம்எல் ஏக்கள் கட்டாயத்தின் பேரில் தங்கியிருப்பதாக தெரிவித்துள்ள னர் என்று போலீஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இந்த விசாரணையின்போது, வடக்கு மண்டல ஐஜி செந்தாமரைக் கண்ணன் விடுதி வளாகத்தில் போலீஸாருடன் ஆலோசனை நடத்தினார். இதனால், விடுதியின் முகப்பில் எம்எல்ஏக்களின் ஆதர வாளர்கள், உறவினர்கள் மற்றும் அதிமுகவினர் குவிந்தனர். எனினும், போலீஸார் அவர்களை அனு மதிக்கவில்லை.
நன்றி : தி இந்து தமிழ்