Breaking News
ஒமைக்ரான் வைரஸ் குறித்து பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை,
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ‘ஒமைக்ரான்’ வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் பாதிப்பை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஒமைக்ரான் வைரஸ் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
உலகம் முழுவதும் 38 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. ஹை ரிஸ்க் நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 6 பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறதா? என பரிசோதனை செய்து பெங்களூரு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன, பரிசோதனை முடிவில் 6 பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இல்லை உறுதியானது.
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,858 பேருக்கு இதுவரை ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 12 இடங்களில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை நிலையங்கள் செயல்பட தொடங்கியுள்ளன. ரிஸ்க் நாடுகளில் இருந்து இதுவரை 28 விமானங்கள் வந்துள்ளன.
தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு இல்லை. எனவே ஒமைக்ரான் வைரஸ் குறித்து மக்கள் பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை. தடுப்பூசி குறைவாக போட்டுக் கொண்ட நாடுகளில் தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 2-தவணை தடுப்பூசி 47.46% பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.