Breaking News
சென்னையில் நள்ளிரவில் திடீரென உள்வாங்கிய கடல்….! – பீதியில் மக்கள்….!
சென்னை,
சென்னையில் நேற்று நள்ளிரவில் மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில்  திடீரென  10-15 மீட்டருக்கு கடல் உள்வாங்கியது. சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக கடல் உள்வாங்கியது. இதனால் மணற்பரப்பு அதிகளவில் தென்பட்டது.
நள்ளிரவில் கடற்கரைக்கு வந்திருந்த மக்கள் கடல் உள்வாங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதற்கு பிறகு சுமார் அரை மணிநேரத்திற்கு பிறகு கடல் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது. இதனால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவானதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், இந்தியாவில் பாதிப்பு ஏற்பட்டுமோ என்ற ஐயம் ஏற்பட்ட நிலையில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என இந்திய சுனாமி மையம் தகவல் தெரிவித்திருந்த நிலையில் கடல் திடீரென உள்வாங்கிய சம்பவம் சென்னை மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.