முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சிறையில் இருக்கும் சசிகலா சந்திக்க மறுப்பு?
பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க மறுப்பு தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதாவின் மறை வுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப் பட்ட சசிகலாவின் ஆதரவா ளர்கள் ஒரு அணியாகவும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதர வாளர்கள் இன்னொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கு நேற்று காலையில் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத் தார். இதன்படி முதல்- அமைச்சராக பழனிச்சாமி பதவி ஏற்றுக் கொண்டார்.
இன்று பெங்களூர் சிறையில் இருகும் சசிகலாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி வாழ்த்து பெற செல்வார் என தகவல் வெளியானது. திடீர் என இந்த பயணம் கைவிடபட்டது. இது குறித்து ஏஎன் ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த பழனிச்சாமி பெங்களூர் இன்று செல்லவில்லை என தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக சிறையில் இருக்கும் சசிகலாவிடம் வக்கீல்கள் ந்தித்து தெரிவித்தனர். மேலும் ஜெயில் அதிகாரிகளிடமும் அனுமதி பெற திட்டமிட்டனர்.
ஆனால் சசிகலா இப்போதைக்கு எடப்பாடி பழனிச்சாமி இங்கு வர வேண்டாம், மெஜாரிட் டியை நிரூபித்த பின்பு வரலாம் என்று சொல்லி அனுப்பிவிட்டார். இதனால் சசிகலாவை சந்திக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூவத்தூர் சென்று அங்குள்ள எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
நன்றி : தினத்தந்தி