சந்தன கட்டை கடத்திய ரயில்வே ஊழியர் கைது
தென்காசி
தமிழக-கேரள எல்லையில் பழைய ஆரியங்காவு ரயில் நிலையம் அமைந்துள்ள. இந்த ரயில் நிலையத்தின் அருகே உள்ள ரயில்வே பாலத்தின் அடியில் சந்தன கட்டைகள் கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
புகாரை தொடர்ந்து அங்கு விரைந்த வனத்துறை போலீசார் பாலத்துக்கு அடையில் இருந்த சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அங்கு பணிபுரிந்த ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது சித்தாயி என்ற ஊழியர் தன்னுடன் பணிபுரியும் முருகன் என்பவருடன் சேர்ந்து சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்றது தெரியவந்தது. பின்னர் சித்தாயியை கைது செய்த வனத்துறையினர் தலைமறைவான முருகனை தேடி வருகின்றனர்.
ரயில்வே ஊழியரே சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.