அல்-கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது! அசாம் போலீசார் அதிரடி நடவடிக்கை
சிக்கிம்,
அசாமில் அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய 5 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு அளித்த தகவலின் பேரில், பார்பெட்டா போலீசார் நேற்றிரவு 5 பேரை கைது செய்தனர்.
அசாம் போலீஸ் ஹவுலி, பார்பெட்டா மற்றும் கால்கசியா ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து சந்தேகத்திற்குரிய 5 நபர்களை கைது செய்தது.
விசாரணையில், கைது செய்யப்பட்ட முகமது சுமன் என்ற நபர் வங்காளதேசத்திலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார். இங்கு வந்து தகாலியபாரா மஸ்ஜித் மசூதியில் ஆசிரியராக பணியாற்றி உள்ளார். அங்கு வரும் 4 நபர்களை மூளைச் சலவை செய்து ஏ பி டி என்ற அமைப்பில் சேர வைத்துள்ளார்.
இதன்மூலம், அசாம் மாநில பார்பெட்டா மாவட்டத்தில் அல் கொய்தா அமைப்பின் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம் என்று திட்டம் தீட்டியுள்ளார். அவர்கள் வசித்து வந்த இடத்திலிருந்து மின்னணு பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிச்கின.
மேலும், வங்காளதேச நாட்டிலிருந்து செயல்படும் அல்கொய்தாவின் ஒரு குழுவுடன் இணைந்த ஒரு அமைப்புடன் அவர்களின் தொடர்புகள் இருந்து வந்தன என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.