Breaking News
காவல் நிலையங்களில் இரவில் விசாரிக்கக் கூடாது – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
சென்னை,
காவல் நிலையங்களில் இரவு நேரங்களில் கைதிகளிடம் விசாரணை நடத்தக்கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அனைத்து மாவட்ட காவல் உயரதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
விசாரணை கைதிகளை இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கக் கூடாது. வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்களிடம் (Night custody) எனப்படும் இரவு விசாரணை  நடத்தக்கூடாது. கைது செய்யப்பட்டவர்களை மாலை 6-மணிக்குள் சிறையில் அடைக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
சென்னையிலும், திருவண்ணாமலையிலும் விசாரணை கைதி மரணம் அடைந்த விவகாரத்தை தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.