Breaking News
அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்ட மேலும் 13 பேருக்கு உடல்நலக் குறைவு- பாதிப்பு எண்ணிக்கை 41-ஆக உயர்வு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் சித்திரைவேல். இவர் தனக்கு சொந்தமான வீட்டில் தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறார். அத்துடன் மேல்தளம் அமைப்பதற்காக கட்டிட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இவர் அங்கு வேலை பார்ப்பவர்களுக்கு, வீட்டின் உரிமையாளர் அறந்தாங்கியில் உள்ள ஒரு பிரியாணி கடையிலிருந்து, 40 பிரியாணி பொட்டலங்களை வாங்கி கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்டதும் கட்டிடத் தொழிலாளர்கள் 11 பேர் வாந்தி எடுத்து மயங்கியுள்ளனர்.

இதனை அடுத்து அதிர்ச்சியடைந்த கட்டிட உரிமையாளர் சித்திரை வேல், உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து அவர்களை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரியாணி சாப்பிட்ட மேலும் 13 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று 27 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில் மேலும் 13 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பிரியாணி சாப்பிட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41-ஆக உயர்ந்துள்ளது.

சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டிடத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது கெட்டுப்போன பிரியாணியா என்பது குறித்து உணவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.