நடுவானில் தொடர்பை இழந்த ஜெட் ஏர்வேஸ் விமானம், போர் விமான பாதுகாப்புடன் பத்திரமாக தரையிறங்கியது
மும்பையில் இருந்து 300 பயணிகளுடன் லண்டன் புறப்பட்டு சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம், ஜெர்மன் வான்பரப்பில் சென்று கொண்டிருந்த போது திடீரென விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவியது.
பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக ஜெர்மன் போர் விமானங்கள் ஜெட் ஏர்வேஸ் விமானத்திற்கு பாதுகாப்பு அளித்தன. சில நிமிடங்களில் விமானத்தினுடைய தொடர்பானது மீண்டும் கிடைத்த போதும், போர் விமானத்தின் தொடர் பாதுகாப்புடன் விமானம் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் ஜெட் ஏர்வேஸ் பத்திரமாக தரையிறங்கியது.
போர் விமானங்களின் துணையுடன், இந்திய விமானம் பயணிக்கும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து உடனடியாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்ட தகவலை தெரிவித்தது. இந்த சம்பவமானது பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெற்றதாகும்.
ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் விமானி தொடர்பு கொள்வதற்கு தவறான அலைவரிசை( frequency) தேர்வு செய்ததே இந்த குழப்பத்திற்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நன்றி : தினத்தந்தி