
சாயர்புரம் போப் பொறியியல் கல்லூரியில் மேயர் ஜெகன் பெரியசாமி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி.யு. போப் பொறியியல் கல்லூரியில் 15வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சாயபுரம் பாஸ்ட்ரேட் தலைவர் குருவானவர் மனோகர் ஆரம்ப ஜெபம் செய்தார். இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர்.ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாணவ மாணவிகளுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கி சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து முன்னாள் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் ஏ.டி.கே ஜெயசீலன் பட்டமளிப்பு பற்றி எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல உப தலைவர் குருவானவர் தமிழ்ச்செல்வன் முடிவு ஜெபம் செய்து ஆசி வழங்கினார். தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் லே செயலாளர் நிகர் கீப்சன், தூத்துக்குடி நாசரேத் திருமண்டல உயர் பள்ளி மேலாளர் பிரேம்குமார் ராஜசிங், பாப் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜெயரட்சகர், ஜெயா பாலிடெக்னிக் நிறுவனர் பொன்னுதுரை, கல்லூரி முன்னாள் டீன் டாக்டர்.ஐசக் பாலசிங், சாயர்புரம் பெருமன்ற உறுப்பினர் ராஜதுரை, சாயர்சேகரபுரம் சேகரன்சன் செயலாளர் அபிஷேகம் பொன்சிங், கல்லூரியின் கட்டிட பொறியாளர் தீபக்ராஜ், கல்லூரி துறை தலைவர்கள் டாக்டர். விஜயலட்சுமி டாக்டர். ஜேஸ்பர்லின், செல்வரதி, ஜாக்சன், ஆனந்தி, டென்னிசன், ஆசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.