ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.100-க்கு விற்பனை விவசாயிகள் மகிழ்ச்சி
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அதன் சுற்றுவட்டார பகுதியில் பிரதான தொழிலானது விவசாயம் மட்டுமே. இந்நிலையில் கல்விமண்டையம், அம்ளிகை, ரத்தனப்படி, திருப்பாச்சி, மூலச்சத்திரம், காமாட்சிபுரம், கோட்டைப்பட்டி, ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் சின்ன வெங்காயம் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 3 மதங்களுக்கு முன்பு வெங்காயம் பயிரிட்டு விவசாயிகள் கூலி ஆட்கள் கொண்டு வெங்காயத்தை பறித்து பட்டையை அமைத்து அதில் சேமித்து வைத்தனர். தற்போது வெங்காயத்ரிக்கு போதிய விலை கிடைக்காததால் கிலோ 40 மற்றும் 50 ரூபாய்க்கு விற்பனையானது.ஆனால் போதிய விலை கிடைக்காததால் விவாசிகள் வெங்காயத்தை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லாமல் தங்கள் தோட்டத்தில் பட்டறை அமைத்து சேமித்து வைத்து இருக்கின்றனர்.
தற்போது அனைத்து பகுதிகளிலும் வெங்காயம் விலை குறைந்ததால் கடந்த 1 மாதத்தின் கிலோ 70 முதல் 80 ரூபாய் 90 ரூபாய் என தற்போது ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் சேமித்து வைத்த வெங்காயத்தை காய்கறி சந்தைகளுக்கு கொண்டு வரப்பட்டு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்து விற்பனை செய்து கொண்டு வருகின்றனர்.இதனால் நல்ல விலைக்கு வெங்காயம் கிடைப்பதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.