திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அதன் சுற்றுவட்டார பகுதியில் பிரதான தொழிலானது விவசாயம் மட்டுமே. இந்நிலையில் கல்விமண்டையம், அம்ளிகை, ரத்தனப்படி, திருப்பாச்சி, மூலச்சத்திரம், காமாட்சிபுரம், கோட்டைப்பட்டி, ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் சின்ன வெங்காயம் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 மதங்களுக்கு முன்பு வெங்காயம் பயிரிட்டு விவசாயிகள் கூலி ஆட்கள் கொண்டு வெங்காயத்தை பறித்து பட்டையை அமைத்து அதில் சேமித்து வைத்தனர். தற்போது வெங்காயத்ரிக்கு போதிய விலை கிடைக்காததால் கிலோ 40 மற்றும் 50 ரூபாய்க்கு விற்பனையானது.ஆனால் போதிய விலை கிடைக்காததால் விவாசிகள் வெங்காயத்தை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லாமல் தங்கள் தோட்டத்தில் பட்டறை அமைத்து சேமித்து வைத்து இருக்கின்றனர். தற்போது அனைத்து பகுதிகளிலும் வெங்காயம் விலை குறைந்ததால் கடந்த 1 மாதத்தின் கிலோ 70 முதல் 80 ரூபாய் 90 ரூபாய் என தற்போது ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் சேமித்து வைத்த வெங்காயத்தை காய்கறி சந்தைகளுக்கு கொண்டு வரப்பட்டு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்து விற்பனை செய்து கொண்டு வருகின்றனர்.இதனால் நல்ல விலைக்கு வெங்காயம் கிடைப்பதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை:
ஆந்திர மாநிலம், குண்டூர் மற்றும் விஜயவாடாவில் 17.12.2022 முதல் 22.12.2022 வரை நடைபெற்ற 3-வது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் 22 மாநிலங்களைச் சேர்ந்த 4000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 177 பழங்குடியின மாணவ, மாணவியர்கள் பங்கு பெற்றனர். போட்டிகளில் இதுவரை காணாத வகையில் 10 தங்கம், 27 வெள்ளி மற்றும் 30 வெண்கலம் என மொத்தம் 67 பதக்கங்களை வென்று தமிழ்நாடு 5-வது இடத்தை பெற்று சாதனை படைத்தது.
பதக்கங்கள் வென்ற பழங்குடியின மாணவ-மாணவிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
அரியலூர் மாவட்ட இருளர் இன பழங்குடியின மக்களுக்கு முந்திரி சேகரம் செய்து கொள்ளும் உரிமைக்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆணைகளை வழங்கினார்.
இதன்மூலம் 500 குடும்பங்களைச் சேர்ந்த 2000 இருளர் இன மக்கள் பயனடைவதோடு, முந்திரி தோட்டங்களில் தொழிலாளர்களாக பணிபுரிந்த இருளர் இன மக்கள் தற்போது தொழில் முனைவோர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.மதிவேந்தன், என்.கயல்விழி செல்வராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.