Breaking News
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்- உடன் பேச வேண்டிய அவசியம் இல்லை: ஜெயக்குமார்

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இருப்பதாக ஓ பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். அதேவேளையில், பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாகவும் கட்சியின் சின்னத்தை முடக்க தான் காரணமாக இருக்க மாட்டேன் என்றும் ஓ பன்னீர் செல்வம் இன்று அளித்த பேட்டியின் போது கூறினார்.

இந்த நிலையில், ஓபிஎஸ் கருத்து தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார், யார் நினைத்தாலும் சின்னத்தை முடக்க முடியாது என்றார். மேலும் அவர் கூறுகையில், ஓ பன்னீர் செல்வத்தின் கருத்து கேலிக்கூத்தாக உள்ளது. இடைக்கால பொதுச்செயலாளர் தான் கட்சியை வழிநடத்தி வருகிறார். ஓபிஎஸ்க்கு ஆதரவாக யாருமே இல்லை. திமுகவின் பீ டீமாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்.

ஓபிஎஸ் நினைப்பது எதுவும் நடக்காது. மக்கள் செல்வாக்கும் தொண்டர்கள் செல்வாக்கும் எங்களுக்குதான் உள்ளது. திமுகவிற்கு ஊதுகுழலாக ஓபிஎஸ் இருக்கிறார். விரக்த்தியின் உச்சத்தில் ஓபிஎஸ் பேசி வருகிறார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர் செல்வத்திடம் பேச வேண்டிய அவசியம் இல்லை.

ஓபிஎஸ் உடன் ஒரு கட்சியும் கூட்டணிக்கு வர மாட்டர்கள். யார் நினைத்தாலும் அதிமுக சின்னத்தை முடக்க முடியாது. ஓபிஎஸ் மனதில் உள்ளது வெளிவந்துள்ளது. அவர் சின்னத்தை முடக்கும் வேலைகளில் தான் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்” என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.