12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த பாடத் தேர்வுகளில் 47 ஆயிரம் பேர் ஆப்சென்ட்: பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவல்
சென்னை: 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த பாடத் தேர்வுகளில் 47 ஆயிரம் மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. கடந்த 13-ம் தேதி 12 வகுப்பு பொது தேர்வு தொடங்கியது. ஆண்டு தமிழ் மொழி பாட தேர்விற்க்கே 50ஆயிரம் மாணவர்கள் வரவில்லை என தேர்வு துறை அதிகார பூர்வமாக அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற ஆங்கில பட தேர்வுக்கும் 50 ஆயிரம் மாணவர்கள் வரவில்லை.
இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், முக்கிய தேர்வுகளுக்கு மாணவர்களை வரவைக்க வேண்டும் என்று அதிகாரிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். இந்நிலையில், நேரு நடைபெற்ற இயற்பியல் பொருளியல் உள்ளிட்ட முக்கிய தேர்வுகளுக்கு கூட 47 ஆயிரம் மாணவர்கள் வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாணவர்களை தேடி பிடித்து தேர்வுக்கு வரவைக்க முயற்சி எடுத்துவரும் நிலையில், பெரும்பாலான மாணவர்கள் அவர்கள் சொந்த ஊரிலோ, வெளியிடங்களிலோ பணியில் உள்ளது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக மாணவர்களை தேர்வுக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.