ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் உத்திரவின் பேரில்.7 பேர் குண்டர் தடுப்புக் காவலில் அடைப்பு,
ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்திரவின் பேரில் 7 பேர் குண்டர் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டனர்.அதன்படி சென்னை புளியாந்தோப்பு , கே.பி .பார்க்கிங் குடியிருப்பு , இ.பிளாக் , 10 வது மாடியைச் சேர்ந்த தினேஷ் ( வயது 22) என்பவரை வழிப்பறி வழக்கில் அம்பத்தூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.இதே போல , மணலி சீனிவாசன் தெருவைச் சேர்ந்த சுந்தர் ராஜன், மணலி ஷர்மா தெருவைச் சேர்ந்த தேவேந்திர பிரசாத் ( வயது 26 ) ஆகிய இருவரும் திருட்டு, வழிப் பறி வழக்கில் மாதாவரம் பால் பண்ணை போலீசாரால் கைது செய்யப்பட்டு , சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இதே போல, கொழுமுடிவாக்கம் மங்களாபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்கிற பல்லு விக்னேஷ் ( வயது 26) என்பவரை திருட்டு , வழிப்பறி வழக்கில் திருநின்றவூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.சென்னை செனாய் நகர் , அருணாச்சலம் 3 வது தெருவைச் சேர்ந்த வினோத் குமார் என்கிற காரமணி (வயது 22) என்பவரை வழிப்பறி வழக்கில் திருநின்றவூர் போலீசார் கைது செய்து , சிறையில் அடைத்துள்ளனர்.புழல் , காவாங்கரை , மாரியம்மன் நகரைச் சேர்ந்த சிவகுரு என்பவரை , பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த வழக்கில் , கொரட்டூர் போலீசார் கைது செய்து , சிறையில் அடைத்துள்ளனர்.சென்னை கொளத்தூர் , மதனகுப்பம் , அம்பேத்கர் நகர், 1 வது தெருவைச் சேர்ந்த பிரவின் (வயது 24) என்பவரை , வழிப்பறி வழக்கில் , கொரட்டூர் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.இப்படி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள , 7 பேரையும், குண்டர் தடுப்புக் காவலில் அடைக்க ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்திரவிட்டார்.அதன்பேரில் மேற்கண்ட 7 பேரும் , குண்டர் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டனர். இந்த ஆண்டு துவக்க முதல் , இதுவரை ஆவடி காவல் ஆணையர் உத்திரவின் பேரில் 98 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டனர்.