தூத்துக்குடியில் சாலை விபத்தில் முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் பலி

தூத்துக்குடியில் சாலை விபத்தில் முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் பலி

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள வர்த்தகரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் மந்திரமூர்த்தி (66). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். காவல் உதவி ஆய்வாளராக பணி செய்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், நேற்று பிற்பகலில் வாகைக்குளம் சுங்கச்சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் வரும்போது எதிர்பாராத விதமாக சாலையில் தவறி விழுந்ததில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )