குஜராத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இரண்டு பேர் கைது
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய அண்ணன், தம்பியை குஜராத் மாநில தீவிர வாத தடுப்பு போலீஸார் கைது செய்துள்ளனர்.
சிரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐ.எஸ். தீவிரவாதிகள் சமூக வலைதளங் கள் மூலம் உலகம் முழுவதிலும் இருந்து தங்கள் அமைப்புக்கு ஆட்களைச் சேர்த்து வருகின்றனர். அவ்வாறு ஈர்க்கப்படும் ஐ.எஸ். ஆதரவாளர்கள் மூலம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தனிநபர் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
குஜராத் மாநிலத்தில் அது போன்ற தாக்குதலை நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக அந்த மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு (ஏடிஎஸ்) தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஏடிஎஸ் போலீஸார் பேஸ்புக், ட்விட்டர் வலைதளங்களை உன் னிப்பாகக் கண்காணித்து வந்தனர்.
இதில் குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் வாசிம் ரமோடியா, நயீம் ரமோடியா ஆகியோர் ஐ.எஸ். தீவிரவாதி களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குஜராத்தில் தொடர் குண்டு வெடிப்பு மற்றும் சோட்டிலோ கோயில் மீது தாக்குதல் நடத்திவிட்டு சிரியாவுக்குச் தப்பிச் செல்ல இருவரும் திட்டமிட்டிருந்தனர். அவர்களை ஏடிஎஸ் போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பாக ஏடிஸ் போலீஸார் கூறியதாவது:
கடந்த 2 ஆண்டுகளாக வாசிம், நயீமை கண்காணித்து வந்தோம். வாசிமை ராஜ்காட் நகரிலும் நயீமை பாவ்நகரிலும் கைது செய் தோம். அவர்களிடம் இருந்து வெடி பொருட்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களைக் கைப்பற்றி யுள்ளோம். அவர்களின் கணினி, செல்போன் ஆகியவற்றை பறி முதல் செய்து விசாரணை நடத்தி வருகிறோம். முன்னெச்சரிக்கை யாக செயல்பட்டு இருவரையும் கைது செய்ததால் பேராபத்து தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்திய டாக்டர் விடுவிப்பு
ஆந்திராவைச் சேர்ந்த டாக்டர் ராமமூர்த்தி. அவர் சிரியாவில் டாக்டராக பணியாற்றி வந்தார். அவரை அணுகிய ஐ.எஸ். தீவிர வாதிகள் தங்கள் மருத்துவமனை யில் பணியாற்ற அழைத்தனர்.
அதற்கு ராமமூர்த்தி மறுக்கவே வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று சிர்தி நகரில் உள்ள மருத்துவமனையில் பணியமர்த்தி னர். சுமார் 18 மாதங்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் சிக்கித் தவித்த அவர் மத்திய அரசின் முயற்சியால் அண்மையில் விடுவிக்கப்பட்டார்.
சிரியாவில் இருந்து நேற்று முன்தினம் அவர் புதுடெல்லி வந்தடைந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்தபோது பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்தேன். கொடூரமான வீடியோ காட்சி களை வலுக்கட்டாயமாக பார்க்கச் செய்தனர். தங்களது கொள்கை களை உலகம் முழுவதும் பரப்ப ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட் டுள்ளனர். இந்தியாவின் மீதும் அவர்களின் கவனம் திரும்பி யுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். நன்றி:தி இந்து தமிழ்