
கோவில்பட்டி ஸ்ரீமகேஸ்வரர் சமேத ஸ்ரீமாலை அம்மன் திருக்கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பால்குடம் தீர்த்தக் குடம் ஊர்வலம்
தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டி வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஶ்ரீமகேஸ்வரர் சமேத ஸ்ரீ மாலையம்மன் திருக்கோவில் வைகாசி பொங்கல் திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடை சாட்டுதலுடன் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர் சார்பில் நிகழ்ச்சிகள் மகேஸ்வரர் சமேத மாலை அம்மன் திருக்கோவில் முன்பு அமைந்துள்ள மின்னொளி கலையரங்கில் நடைபெற்று வந்தது வைகாசி திருவிழா முன்னிட்டு நேற்று காலையில் தனுஷ்கோடியாபுரம் தெருவில் உள்ள வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட செல்வ விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் மற்றும் தீர்த்தக் கூட ஊர்வலம் நடைபெற்றது அதனை அன்று இரவு மாலை அம்மன் திருக்கோவில் முன்பு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது அதனைத் தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது.
அதனை அடுத்து சுவாமி அம்பாள் திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு சாமக்கடை கொடுத்தாலும் நடைபெற்றது நிகழ்ச்சியில் வணிக வைசிய சங்கத் தலைவர் வெங்கடேஷ் செயலாளர். வேல்முருகன் பொருளாளர் தங்க மாரியப்பன் வணிக வைசிய நடுநிலை பள்ளி செயலாளர் பூவ லிங்கம் துணைத் தலைவர் பரமசிவம் துணைச் செயலாளர்கள் மாதவ ராஜா முருகேசன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பழனிக்குமார் மீனாட்சி சுந்தரம் கண்ணன் கார்த்திக் முருகன் சங்கர் குமார் சின்னதுரை சுரேஷ் செல்வம், செல்வமாரியப்பன் நடராஜன் மாரிக்கண்ணன் செல்வகுமார் மீனாட்சிசுந்தரம் செல்வ சுப்பிரமணியன் நவநீதன் ராஜ் நம்பிராஜன் முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் ரத்தினவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நிருபர் கோவில்பட்டி- எஸ். முத்துக்குமார்