தாமிரபரணியில் இறங்கி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்
வெளிநாட்டு குளிர்பான ஆலைகள் தாமிரபரணியிலிருந்து தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடையை உயர் நீதிமன்றம் நேற்று நீக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் ஆற்றுக்குள் இறங்கி இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க குளிர்பான ஆலைகளுக்கு கடந்த ஆண்டு நவம்பரில் உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. நேற்று இவ்வழக்கை நீதிமன்றம் விசாரித்து, அப்பாவு உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதுகுறித்து தெரியவந்ததும் திருநெல்வேலியில் உள்ள பல் வேறு தன்னார்வ அமைப்பு களைச் சேர்ந்த இளைஞர்களும், மாணவர்களும் கொக்கிரகுளத் தில் தாமிரபரணி ஆற்றுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் ஆற்றில் பால் ஊற்றினர்.
இப்போராட்டத்தில் பங்கேற் பதற்காக ஆற்றை நோக்கி மேலும் பல இளைஞர்கள் திரண்டு வந்ததையடுத்து அங்கு போலீ ஸார் வரவழைக்கப்பட்டனர் இத னால் பரபரப்பு உருவானது. ‘அனு மதியின்றி போராட்டம் நடத்தினால் கைது செய்வோம்’ என்று கூறி, அவர்களை போலீஸார் எச்சரித்து கலைந்து போகச் செய்தனர்.
இதற்கிடையே, திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி மாணவர் கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்