ஏப்ரலில் நடைபெறவுள்ள தகுதித்தேர்வு மூலம் 3 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் சுமார் 3 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப திட்ட மிட்டுள்ளதாக பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. சென்னையில் எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை பள்ளிக்கல்வி அமைச் சர் கே.ஏ.செங்கோட்டையன் பார்வையிட்டார். அப்போது பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா, துணைச் செயலாளர் ராகுல்நாத், மாவட்ட ஆட்சியர் பி.மகேஸ்வரி, அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி, மாவட்ட முதன் மைக் கல்வி அதிகாரி அனிதா உள்ளிட்டோர் உடனிருந்த னர். தேர்வு மையத்தைப் பார்வை யிட்ட பிறகு அமைச்சர் செங் கோட்டையன் பள்ளி வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை ஏறத்தாழ 8 லட்சத்து 33 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினர். இந்த ஆண்டு 8 லட்சத்து 98 ஆயிரம் பேர் தேர்வெழுதுகிறார்கள். முதல் நாளான இன்று (நேற்று) தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலை யாளம், இந்தி, உருது, அரபி, சமஸ்கிருதம், பிரெஞ்சு, ஜெர்மனி உள்ளிட்ட 10 மொழித்தாளை மாண வர்கள் எழுதுகிறார்கள். கடந்த ஆண்டைக் காட்டிலும் தேர்வெழுது வோரின் எண்ணிக்கை இந்த ஆண்டு 65 ஆயிரம் அதிகம். மாணவர்கள் படிப்பை இடை யில் நிறுத்துவதை தடுத்து அவர் கள் தொடர்ந்து படிப்பதை ஊக்கு விக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன் காரணமாகத்தான் பொதுத் தேர்வெழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த அரசைப் பொறுத்தவரையில், கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய விரும்பு கிறது. அதற்கான பணிகள் த ற்போது நடைபெற்று வருகின்றன.
அரசு பள்ளிகளில் காலியாக வுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் எடுக் கப்பட்டு வருகின்றன. உடனடி தேவை ஏற்பட்டால் பெற்றோர் ஆசிரியர் கழகம் (பிடிஏ) மூலம் காலியிடங்களை நிரப்ப ஏற்பாடு செய்யப்படுகிறது. அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியில் 4,632 காலியிடங்களை நிரப்ப 2 ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு நடத்தப்பட்டும் இன்னும் முடிவு வெளியிடப்படவில்லையே என்று கேட்கிறீர்கள். ஆய்வக உதவியாளர் நியமனம் தொடர் பான உயர் நீதிமன்ற தீர்ப்பு ஆய்வு செய்யப்பட்டு 10 நாட் களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் செங் கோட்டையன் கூறினார்.
ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட இருக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் எத்தனை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அவரிடம் கேட்டபோது, “சுமார் 3 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளோம். இதில் பாடவாரியாக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் இடை நிலை ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, நடத் தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வு களில் தேர்ச்சி பெற்று பணி கிடைக்காமல் ஆயிரக்கணக் கானோர் இருக்கிறார்கள். அவர் களுக்கு ஆசிரியர் நியமனத்தில் குறிப்பிட்ட சதவீத இடங்களை ஒதுக்கலாமா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதுகுறித்து முதல்வரிடம் பேசி விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்” என்றார்.