தமிழக பட்ஜெட்டை இறுதிசெய்தார் முதல்வர் – 3-வது வாரத்தில் தாக்கல் செய்யப்படுகிறது
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று அமைச் சரவைக் கூட்டம் நடந்தது. இதில் 2 மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு, தமிழக பட்ஜெட்டை இறுதிசெய்யும் பணிகள் மேற் கொள்ளப்பட்டன.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி ராஜினாமா செய்தார். அதன் பின்னர் ஏற்பட்ட பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு இடை யில், எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி 16-ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார். அவர் தலைமையிலான அமைச் சரவையும் அன்றே பதவியேற்றது. வழக்கமாக, அடுத்து வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் ஆண்டுதோறும் மார்ச் மாதம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும். இதன்படி, 2017-18ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இம் மாதம் 3-வது வாரத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
முதல்வராக எடப்பாடி பழனி சாமி பதவியேற்றபோது, நிதித் துறையையும் அவரே கவனித் தார். பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால், மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமா ரிடம் நிதித்துறை ஒப்படைக் கப்பட்டது.
முக்கியமான திட்டங்களுக்கான..
அதைத் தொடர்ந்து, பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்தன. துறைகளில் இருந்து முக்கியமான திட்டங்களுக்கான தகவல்கள் பெறப்பட்டு, தொகுக் கப்பட்டன. இப்பணிகளில் நிதித் துறை செயலர் கே.சண்முகம் தலைமையிலான அதிகாரிகள் இரவு பகல் பாராமல் ஈடுபட்டனர்.
வழக்கமாக பட்ஜெட் புள்ளி விவரங்கள் தயாரானதும், அமைச் சரவை கூடி, பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து முடிவெடுக்கும். அந்த வகையில் பட்ஜெட்டை இறுதிசெய்வதற்கான அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், திண்டுக் கல் சீனிவாசன், கே.ஏ.செங் கோட்டையன் உள்ளிட்ட அமைச் சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித் துறை செயலர் கே.சண்முகம் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
2 மணி நேரம் நடந்தது
கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, அமைச்சரவை கூட்ட அரங்கில் வைக்கப்பட்டுள்ள ஜெய லலிதாவின் உருவப்படத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மலர் தூவி மரி யாதை செலுத்தினர். தொடர்ந்து 4.40 மணிக்குத் தொடங்கிய கூட்டம் 6.40 மணிக்கு முடிந் தது. 2 மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில், துறைவாரியாக பட்ஜெட்டில் சேர்க்கப்பட வேண் டிய முக்கிய திட்டங்கள் தொடர் பாக விவாதிக்கப்பட்டு, முடி வெடுக்கப்பட்டது.
முதல்வராக எடப்பாடி பழனி சாமி பதவியேற்றதும், 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும், மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் உள்ளிட்ட 5 திட்டங்களை அறிவித்தார். இதற் கான அரசாணைகள் பிறப்பிக்கப் பட்ட நிலையில், இவற்றுக்கான நிதி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட உள்ளது. இது தவிர, சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களுக்கான நிதியும் ஒதுக்கப்படுவது அவசியமாகிறது. மேலும், நிதி ஆதாரங்களைப் பெருக்குவது, துறைதோறும் மானியக் கோரிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீடு ஆகியவை குறித் தும் ஆலோசிக்கப்பட்டதாக தலை மைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அது பற்றிய விவரங்களை அரசு வெளியிடவில்லை.