தூத்துக்குடி: காணொளி காட்சி மூலம் நடந்த வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடி: காணொளி காட்சி மூலம் நடந்த வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடி காணொளி காட்சி மூலம் நடந்த வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் அனைத்து முகவர்களும் கலந்து கொண்டனர்.

திமுக அமைப்புச் செயலாளர் பாரதி, செய்தித் தொடர்பு செயலாளர் இளங்கோவன், மாநில வழக்கறிஞர் அணி அமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளங்கோ ஆகியோர் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கவுள்ள திமுக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் அனைத்து முகவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் காணொளி காட்சி மூலம் விளக்கி கூறினர்.

இதில், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், தலைமை தேர்தல் முகவர் வழக்கறிஞர் சுரேஷ்குமார், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஒன்றியச் செயலாளர்கள் சின்னபாண்டியன், முருகேசன், நவநீதக்கண்ணன், அன்புராஜன், ராதாகிருஷ்ணன், பேரூர் செயலாளர் வேல்சாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபேர் இளம்பரிதி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துைண அமைப்பாளர் நாகராஜன், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாநகர அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாநகர வக்கீல் அணி தலைவர் நாகராஜன், துணை அமைப்பாளர் ரூபராஜா, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரவி, சங்கரநாராயணன், மாவட்ட பிரதிநிதிகள் மாாிச்சாமி, நாராயணன், வட்டச்செயலாளர்கள் ரவிசந்திரன், சுரேஷ், செந்தில்குமார், முன்னாள் கவுன்சிலர் ஜெயசிங், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )