முஸ்லீம் பெண்களுக்கு ‛வாட்ஸ் அப்’ மூலம் ‛தலாக்’ அனுப்பிய கணவர்கள்
ஐதராபாத்தை சேர்ந்த 2 முஸ்லீம் பெண்களுக்கு வெளிநாட்டில் வாழும் கணவர்கள் வாட்ஸ் அப் -பில் ‛தலாக்’ அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐதாரபாத்தை சேர்ந்த அப்துல் ஹபீஸின் மகன்கள் செய்யது பயாசுதீன், மற்றும் உஸ்மான் குரைசி ஆகியோர் அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி மனைவிகள் பாத்திமா மற்றும் பக்ரைன் நூர் ஆகியோர் தங்கள் குழந்தைகளோடு இந்தியாவில் அப்துல் ஹபீஸின் குடும்பத்துடன் இருக்கின்றனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்கள் மனைவிகளுக்கு வாட்ஸ் அப் மற்றும் இ-மெயிலில் ‛தலாக் தலாக் தலாக் ‘ என்ற வாசகத்தை அனுப்பியுள்ளனர். இதனால் அவர்களது மனைவிகள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் அப்துல் ஹபீஸின் குடும்பத்தினர் பாத்திமா , பக்ரைன் நூர் மற்றும் அவர்களை குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வெளியேற்றினர்.
‛தலாக்’ தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில் இச்சம்பவம் ஐதாபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‛தலாக்’ குறித்து தங்கள் கணவர்கள் விளக்கமளிக்க வேண்டும் என பாத்திமா மற்றும் பக்ரைன் நூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசரணை நடத்தி வருகின்னறனர்.