
தூத்துக்குடியில் மனைவி திட்டியதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை
தூத்துக்குடி சிலுவைபட்டி கணபதி நகரைச் சேர்ந்தவர் கோட்டைச்சாமி மகன் ஆசைத்தம்பி (45). வெல்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வருவாராம். இதனை அவரது மனைவி சந்தனமாரி கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ஆசைத்தம்பி நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தாள் முத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
CATEGORIES மாவட்டம்