
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி பள்ளியில் மரம் நடும் விழா நடைபெற்றது
தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச் சூழல் தினத்தினை முன்னிட்டு தேசிய பசுமைப்படை மற்றும் ஆல்கன் டிரஸ்ட் சார்பாக மரம் நடு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் வக்கீல் ஸ்டேன்லி வேதமாணிக்கம் தலைமையில் பள்ளியின் முன்னாள் மாணவரும் ஆல்கன்டிரஸ்ட் தலைவருமான அரசு வக்கீல் மோகன்தாஸ் சாமுவேல், பள்ளி தாளாளர் வக்கீல் ஸ்டேன்லி வேதமாணிக்கம் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டி சுற்றுச் சூழல் தினத்தை பற்றி எடுத்துரைத்தாா்கள். பின்னர் புங்கை, வேம்பு போன்ற மரங்களும், பப்பாளி, கொய்யா, பலா, எலுமிச்சை போன்ற பழ வகை மரக்கன்றுகளும் நடப்பட்டன.
விழாவில் வக்கீல் பிரவீன்குமாா், மகேஸ்வரன்சிங், ஆல்கன்டிரஸ்ட் உறுப்பினர்கள் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
CATEGORIES மாவட்டம்